திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பத்மஜா விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்தப் பகுதி மழை நிலவரத்திற்கேற்ப மாவட்ட நிர்வாகங்கள் இந்த விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
