பஞ்சாப் மாநிலத்தில் மின்சாரக் கம்பியில் சிக்கி உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த பறவை ஒன்றை, இளைஞர் ஒருவர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்தப் பறவையைக் காப்பாற்ற உயரமான கிரேன் உதவியுடன் மேலே சென்ற அந்த இளைஞர், மிகவும் அபாயகரமான நிலையில் மின்சார வயர்களுக்கு இடையே சிக்கிய பறவையை பத்திரமாக மீட்டார். இந்தத் துணிச்சலான மீட்புப் பணிகள் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அந்த இளைஞருக்குப் பாராட்டுகள் குவித்து வருகின்றன.
