“தொழில் போட்டியால் நடுரோட்டில் களேபரம்…” உணவக உரிமையாளரை மிரட்டிய முன்னாள் கவுன்சிலர்…. ஊட்டியில் பரபரப்பு…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தொழில் போட்டி காரணமாக உணவக உரிமையாளர் ஒருவரை, திமுக பிரமுகர் கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதகை பேருந்து நிலையம் அருகே உணவகம் நடத்தி வரும் முன்னாள் கவுன்சிலரான ரவி என்பவரது கடைக்கு அருகிலேயே, புதிதாக ஒரு உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தொழில் ரீதியான போட்டி நிலவி வந்த சூழலில், ஆத்திரமடைந்த ரவி தனது குடும்பத்தினருடன் சென்று பக்கத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த மோதலின் போது, ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் பக்கத்து கடை உரிமையாளரையும் அவரது மகனையும் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், கடுமையான சொற்களால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. பொது இடத்தில நடந்த இந்த மோதல் மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.