“அறை முழுவதும் அசிங்கம்” வீடியோ கேமிற்கு அடிமையான இளைஞர்… 2 ஆண்டுகளாக ஹோட்டலை விட்டு வெளியேறாததால் காத்திருந்த அதிர்ச்சி..!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love

சீனாவைச் சேர்ந்த ஒரு இளைஞர், வீடியோ கேம்கள் விளையாடும் பழக்கத்திற்குத் தீவிரமாக அடிமையானதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஹோட்டல் அறையிலேயே முடங்கிக் கிடந்துள்ளார். அந்த அறையை விட்டு ஒருமுறை கூட அவர் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. தனக்குத் தேவையான உணவை ‘டெலிவரி’ செயலிகள் (Delivery Apps) மூலம் ஆர்டர் செய்து, அறையின் வாசலிலேயே பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அந்த அறையை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

அவர் சென்ற பிறகு, அறையைச் சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்த இளைஞர் அமர்ந்து கேம் விளையாடிய மேசை மற்றும் நாற்காலிகளைச் சுற்றி, சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் கழிவுகள் குப்பை மேடு போலக் குவிந்து கிடந்தன. வீடியோ கேம் மோகத்தால் ஒரு இளைஞர் தனது சுகாதாரத்தையும், சமூக வாழ்க்கையையும் முற்றிலும் துறந்து வாழ்ந்த இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.