கொடுமையான தருணம்.! பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர்… மனைவி விவாகர்த்து கேட்டதால் நீதிமன்றத்திற்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து வந்த அவலம்…!!

By Soundarya on மார்கழி 20, 2025

Spread the love
கான்பூர் நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் தொடர்பான ஒரு வழக்கின் விசாரணையில், மனிதாபிமானமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாத நிலையில் இருந்த ஒரு நபர், ஸ்ட்ரெச்சரில் வைத்து நீதிமன்ற அறைக்குள் ஆஜர்படுத்தப்பட்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்குத் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில், அவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை (IPC 498A) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததோடு, மாதாந்திர ஜீவனாம்சம் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதற்கிடையில், அந்த நபருக்கு மூளை இரத்தக் கசிவு (Brain Hemorrhage) ஏற்பட்டு, உடல் ஒரு பக்கம் முழுமையாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான அனைத்து மருத்துவச் சான்றிதழ்களையும், அவர் சார்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும், அந்த நபர் நேரில் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி அவரது குடும்பத்தினர் அவரை ஸ்ட்ரெச்சரில் கிடத்தி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். உயிருக்குப் போராடும் நிலையில் ஒருவரை நீதிமன்றத்திற்கு வரவழைத்த இந்தச் செயல், சட்ட நடைமுறைகளில் மனிதாபிமானத்தின் அவசியம் குறித்த விவாதத்தை எழுப்பியுள்ளது.