உச்சகட்ட கொடூரம்… பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்… அதிர்ச்சி தரும் காரணம்…!

By Divyamayakannan on ஆவணி 22, 2025

Spread the love

உத்திரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு கிணற்றில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உடல் முழுவதும் சிதைந்த நிலையில் இருந்தது. அப்பெண்ணின் காதலன் மற்றும் முன்னாள் கிராம தலைவர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இக்கொலையில் ஈடுபட்ட மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார். கிஷோர்புரா கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் கிராம தலைவர் சஞ்சய் படேல், அப்பெண் திருமணம் செய்து கொள்ளும்படி பல நாட்களாக தொந்தரவுச்  செய்து வந்ததால்.அதனால்  தனது மருமகன் சந்தீப் உடன் சேர்ந்து அப்பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி சாக்கில் போட்டு கிணற்றில் பாதியும் பாலத்தின் அருகே பாதியும் வீசினோம் என்று விசாரணையில் முன்னாள் கிராம தலைவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒரு விவசாயி அவரது கிணற்றில் ஏதோ துர்நாற்றம் வீசுகிறது என்று காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்குச்  சென்று கிணற்றிலிருந்து சடலத்தின் கைகளை  கண்டெடுத்தன . இதுவரை தலை மற்றும் கால்கள் எதுவும் கிடைக்கவில்லை.  நூற்றுக்கும் அதிகமானவரை விசாரணை நடத்தியுள்ளோம், 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தலில் கொலை செய்யப்பட்டவர் ரத்னா யாதவ் என்ற விதவைப் பெண் என்று அடையாளம் காணப்பட்டது. விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை இரண்டு பேர் கைதுச் செய்யப்பட்டுவுள்ளன எனப் போலீஸ் கூறியுள்ளது .