சினிமா சீன் இல்ல நிஜம்…! நாய் கொடுத்த முத்தம்… தலையில பலத்த அடி… அடுத்த நாள் காலை கண்ணைத் திறந்து பார்த்த… பெண்ணுக்குக் காத்திருந்த ட்விஸ்ட்…!!

By Swetha on ஆடி 2, 2026

Spread the love

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரைச் சேர்ந்த லிசா ரீட் என்ற பெண்ணுக்கு, அவர் 11 வயதாக இருக்கும்போது மூளையில் கட்டி ஏற்பட்டது. இந்த கட்டியானது அவரது கண் நரம்புகளை அழுத்தியதால், அவர் தனது பார்வைத்திறனை முழுமையாக இழந்தார். அடுத்த 13 ஆண்டுகள் இருளில் வாழ்ந்த லிசா, தனது அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வழிகாட்டி நாயைச் சார்ந்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், நவம்பர் 2000-ல் ஒரு நாள் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, தனது வளர்ப்பு நாயை குனிந்து முத்தமிட முயன்றபோது நிலைதடுமாறி அருகில் இருந்த காபி மேஜையின் மீது அவரது தலை பலமாக மோதியது.

தலையில் ஏற்பட்ட வலியுடன் அன்றிரவு தூங்கச் சென்ற லிசா, அடுத்த நாள் காலை கண் விழித்துப் பார்த்தபோது ஒரு பெரும் அதிசயம் காத்திருந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கண்கள் மங்கலாகத் தொடங்கி, பின் தெளிவாகப் பார்க்க ஆரம்பித்தன. மேஜையில் பலமாக அடிபட்டதன் காரணமாக, அவரது மூளையில் இருந்த கட்டி சற்று நகர்ந்திருக்கலாம் என்றும், இதனால் அழுத்தப்பட்டிருந்த கண் நரம்புகள் விடுபட்டு அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர். இந்த விபத்திற்குப் பிறகு, அவரது ஒரு கண்ணில் 80 சதவீதப் பார்வை மீண்டும் கிடைத்தது. இதன் மூலம் பல வருடங்களுக்குப் பிறகு அவர் தனது பெற்றோரின் முகத்தை முதன்முறையாகக் கண்டார்.

   

மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்திய இந்த உண்மைச் சம்பவம் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து இணையத்தில் காட்டுத்தீயாய் பரவியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், திரைப்படங்களில் மட்டுமே நடக்கும் இது போன்ற ஒரு சம்பவம் நிஜ வாழ்க்கையிலும் நடந்திருப்பதை வியப்புடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும், “பாவம் அந்த நாயின் வேலை போய்விட்டது”, “ஹேங் ஆன போனை தட்டிச் சரி செய்வது போல இவருடைய சிஸ்டம் ரீபூட் ஆகிவிட்டது” என்று பலரும் நகைச்சுவையாகவும், ஆச்சரியத்துடனும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.