ஜார்ஜ்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த 2022-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் வாயிலாக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருடன் பழகத் தொடங்கினார். நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது. காதலன் அடிக்கடி ஜார்ஜ்கண்ட் சென்று தன் காதலியைச் சந்தித்து வந்துள்ளார். இந்நிலையில், பெண்ணின் தந்தை அவரிடமிருந்த செல்போனைப் பறித்ததால், தோழியின் போன் மூலமாகத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். பின்னர், காதலன் நேரில் சென்று புதிய போன் வாங்கிக் கொடுத்தபோதிலும், அதுவும் வீட்டில் சிக்கியதால் அப்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
வீட்டில் தொடர்ந்து எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் அதிகரித்ததால், அந்தப் பெண் தன் காதலனை அடைவதெனத் தீவிரமாக முடிவெடுத்தார். கையிலும்கூட செல்போன் இல்லாத நிலையிலும், காதலனின் வீட்டு முகவரியை மட்டுமே நம்பிக்கையாகக் கொண்டு ஜார்ஜ்கண்டிலிருந்து புறப்பட்டார். வழியில் 5 ரயில்களை மாற்றி மாற்றி ஏறி, சுமார் 1020 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இறுதியில் மத்திய பிரதேசத்தில் உள்ள தன் காதலனின் வீட்டை வெற்றிகரமாகச் சென்றடைந்தார்.
காதலியின் இந்தத் துணிச்சலான முயற்சியைக் கண்ட காதலனும் அவரது குடும்பத்தினரும் அவரை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து, அருகிலிருந்த ஒரு கோவிலில் வைத்து இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, பெண்ணின் வீட்டாடமிருந்து நேரக்கூடிய அச்சுறுத்தல்களிலிருந்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி, காதல் ஜோடியினர் இருவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகிப் பாதுகாப்பு கோரியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், போதை மயக்கத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரின் தலையில் மற்றொரு நபர் சிறுநீர் கழித்து சிரிக்கும்…
பீகார் மாநிலத்தில் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் பெரும் சேதத்தைச் சந்தித்து வருகின்றன.…
ஹைதராபாத் மியாபூர் அல்வின் காலனி பகுதியில், தங்களை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் செயலைக் கண்டித்து பெற்றோர் வீட்டின் முன்பு…
பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள நசீர் அபாத் காவல் எல்லைக்குட்பட்ட 'தோக் முஸ்தகீம்' பகுதி விவசாய நிலத்தில், கை…
பிரதாப்கர் அருகே லக்னோ-வாரணாசி ரயில் பாதையில் உள்ள கிதிர்பூர் பகுதியில், குடும்பத்தினர் சிலர் தங்களது ஆடுகளை ரயில் தண்டவாளப் பகுதியில்…
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…