“கை, கால்கள் கட்டப்பட்டு…” விவசாய நிலத்தில் அழுகிய நிலையில் மர்ம சடலம் மீட்பு…! நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்…. பகீர் வீடியோ…!!

Spread the love

பாகிஸ்தான் நாட்டின் ராவல்பிண்டி நகரில் உள்ள நசீர் அபாத் காவல் எல்லைக்குட்பட்ட ‘தோக் முஸ்தகீம்’ பகுதி விவசாய நிலத்தில், கை மற்றும் கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலத்திற்குச் சென்ற அப்பகுதி மக்கள், அங்கே சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக நசீர் அபாத் போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், கை, கால்கள் கொடூரமாகக் கட்டப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட நிலையிலிருந்த அந்த நபரின் உடலைக் கைப்பற்றினர்.

கொல்லப்பட்டவர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. அந்த நபரை வேறு எங்காவது வைத்து மிளகாய் தூள் மற்றும் கொடூர ஆயுதங்களால் சித்திரவதை செய்து, கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு உடலை இந்த விவசாய நிலத்தில் வீசிச் சென்றனரா என்ற கோணத்தில் போலிஸார் தடயங்களைச் சேகரித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

7 minutes ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

10 minutes ago

அடப்பாவி… நீயெல்லாம் மனுஷனா?… குடும்ப தகராறில் மாமனாரை… கட்டையால் அடித்த கொடூரம்… தடுக்க வந்த மனைவிக்கு தர்ம அடி… ஆந்திராவை உலுக்கிய கணவனின் வெறிச்செயல்…!

ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…

11 minutes ago

ஐயோ கடவுளே… வீட்டில் திடீரென பாய்ந்த காட்டுப்பன்றி… நாற்காலியோடு தூக்கி வீசப்பட்ட முதியவர்… ஷாக்கிங் CCTV வைரல் வீடியோ… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…

27 minutes ago

“பாட்டி வீட்டுக்கு போக மாட்டேன்…” தாயின் அழுத 12 வயது சிறுவன்… 2 ஆண்டுகளாக அத்துமீறிய கொடூரம்…. பகீர் பின்னணி…!!

ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…

30 minutes ago

ஐயோ… சாமி கும்பிட்டு வந்த இடத்தில்… இப்படி ஒரு சோதனையா?… நொறுங்கி கிடந்த வாகனத்தைப் பார்த்து… நிலைகுலைந்த இன்ஸ்பெக்டர்… நெஞ்சை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

ஹரியானா மாநிலம் பல்வால் பகுதியில், கதூ ஷியாம் கோவிலுக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த பக்தர்கள் பயணித்த வாகனம் பயங்கர…

43 minutes ago