#image_title
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நயன்தாரா சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, விஜய், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். எஸ்.ஜே சூர்யாவுடன் கள்வனின் காதலி உள்ளிட்ட பல படங்களில் நடித்த நயன்தாரா திடீரென சிறிய பிரேக் எடுத்தார்.
ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் சூப்பர் கம்பேக் கொடுத்தார் நயன்தாரா. அதன் பிறகு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாயா, அறம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்தடுத்து ரஜினிகாந்துடன் தர்பார், அண்ணாத்த, அஜித்துடன் விசுவாசம், விஜய் உடன் பிகில் ஆகிய படங்கள் அவருக்கு மேலும் புகழை தேடி தந்தது.
கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுடிலும் நயன்தாரா காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் தந்தையின் உடல் நலனை கவனித்துக் கொள்வதற்காக நயன்தாரா கேரளா சென்றுள்ளார். அங்கே இரவு நேரத்தில் தனது உறவினர்களுடன் நின்று ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.
உறவினர்கள் இருவரும் தனிஷ்க் ஜுவல்லரியில் இடம் பெற்றுள்ள நயன்தாராவின் போஸ்டரை பார்த்துக்கொண்டே நின்றனர். பின்னர் நயன்தாராவை பார்த்து மேடம் நீங்க இங்கே எப்படி என பேசி கலாய்க்கும் வீடியோவை நயன்தாரா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…