உன் அப்பாவைப் பாக்கலாம் வா… 5 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று… பூந்தொட்டியால் அடித்துத் துவைத்த 3-ஆம் வகுப்பு மாணவன்… ஹரியானாவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள சமஸ்கிருதி மாதிரிப் பள்ளியில், கே.ஜி. வகுப்பில் படிக்கும் சிறுமி ஒருவரை 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் கற்கள் மற்றும் பூந்தொட்டியால் மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வந்திருப்பதாகக் கூறி சிறுமியை முதல் தளத்திற்கு அழைத்துச் சென்ற அச்சிறுவன், அங்கே வைத்து பூந்தொட்டியால் அவளது தலையில் தாக்கியுள்ளான். சிறுமி மயக்கமடைந்த பின்னரும், காலியாக இருந்த வகுப்பறைக்கு இழுத்துச் சென்று தொடர்ந்து தலையில் அடித்துத் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்து தீவிர நிலையில் மீட்கப்பட்ட சிறுமி, முதலில் செக்டார் 6-இல் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காகச் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூரத் தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

   

https://twitter.com/HateDetectors/status/2116479311750545879/video/1

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உள்ளூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பள்ளியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முறைகள் குறித்துப் பள்ளி நிர்வாகத்திடமும், சிறுவனின் மனநிலை மற்றும் பின்னணி குறித்து அவனது பெற்றோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திற்குள் நிகழ்ந்த இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பலத்த அச்சத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.