அடப்பாவிங்களா… ஆண் குழந்தை வேணும்னு அடம் பிடித்த குடும்பம்… சட்டவிரோதக் கருக்கலைப்பால் பறிபோன… 24 வயது இளம் பெண்ணின் உயிர்… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில், சட்டவிரோத பாலின கண்டறிதல் பரிசோதனைக்குப் பிறகு கட்டாயக் கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்பட்ட 24 வயது இளம் பெண் கிரண் குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். பெண் கரு என்பதால், குடும்பத்தினரின் வற்புறுத்தலால் இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, உயிரிழந்த பெண்ணின் கணவர் சோனு கேவத், தனியார் கண்டறிதல் மையத்தின் நடத்துநர், அதன் ஊழியர் மற்றும் ஒரு செவிலியர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கணவர் மற்றும் மாமியார் ஆண் குழந்தை வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டதாகப் பெண்ணின் தந்தை ராஜேந்திர குமார் கேவத் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

   

ஷியாம்தி சௌக்கில் உள்ள சென்ட்ரல் டயக்னாஸ்டிக் சென்டரில் பாலின கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டதை அடுத்து, ஷியாம்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கிரண் குமாரி அழைத்துச் செல்லப்பட்டு அங்கே சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.