“அதுவும் ஒரு உயிர் தானே” நீதிபதியின் புதிய வீட்டிற்குள் நுழைந்த தெரு நாய்… துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற பாதுகாவலர்… பகீர் கிளப்பும் வீடியோ..!!

By Soundarya on மார்கழி 19, 2025

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், நீதிபதி ஒருவரின் வீட்டைப் பாதுகாக்கும் காவலர் ஒருவர் தெருநாய் ஒன்றைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட வீட்டின் மாடியில் நாய் ஏறி, அங்கிருந்த சிமெண்ட் பூச்சுகளைச் சேதப்படுத்தியதால் இந்த கொடூரச் செயல் அரங்கேறியதாகத் தெரிகிறது. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் வீடியோவில், சீருடை அணிந்த காவலர் ஒருவர் நாயைத் துரத்திச் சென்று குறிவைப்பதும், அருகில் இருப்பவர் அவரைச் சுடுமாறு தூண்டுவதும் பதிவாகியுள்ளது.

<

   

/div>

   
துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில நிமிடங்களில் அந்த நாய் உயிரிழந்ததை வீடியோவில் இருப்பவர்கள் உறுதி செய்கின்றனர். விலங்கு நல ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.