அயோத்தி ராமர் கோவிலுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்டமான ராமர் சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 10 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்ட இந்தச் சிலையானது தங்கம், வைரம் மற்றும் மரகதம் போன்ற விலை உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்டு ஜொலிக்கிறது.
தென்னிந்தியச் சிற்பக் கலை நுட்பத்துடன், தஞ்சாவூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான இந்தச் சிலை, சுமார் 1,750 கிலோமீட்டர் தூரம் பயணித்து பாதுகாப்பாக அயோத்தியைச் சென்றடைந்தது. ஏறத்தாழ 500 கிலோ எடை கொண்ட இந்தச் சிலையினைப் பீடத்தில் நிறுவுவதற்கான பூமி பூஜையை ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் முன்னின்று நடத்தினார்.
தற்போது அங்கத் டிலா பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைக்கு, நாடு முழுவதிலும் உள்ள ஆன்மீகப் பெரியோர்கள் முன்னிலையில் விரைவில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. பெயர் சொல்ல விரும்பாத அந்தப் பக்தரின் இந்த காணிக்கை, அயோத்திக்கு வரும் பக்தர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…