ஹைதராபாத்தில் கொண்டபூர் பகுதியில் தனது காதலருடன் தங்கியிருந்த 36 வயதுடைய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை, அங்கு தங்கியிருந்த ஆதித்யா ஆனந்த் என்ற மென்பொருள் பொறியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்திருந்த அப்பெண், காதலர் இல்லாத நேரத்தில் தனிமையை பயன்படுத்தி அந்த நபர் தன்னை அரைநிர்வாணமாகத் தொல்லைப்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். காதலர் வந்ததால் அதிர்ஷ்டவசமாகத் தப்பிய அப்பெண், நெதர்லாந்து திரும்பிய பிறகே தனது காதரிடம் நடந்துகூறி, டச்சு தூதரகத்தின் உதவியுடன் ஜூலை 22 அன்று ஹைதராபாத் வந்து முறைப்படி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
https://twitter.com/TeluguScribe/status/2081761962925658465/photo/1
இப்புகாரின் அடிப்படையில் கச்சிபோலி காவல் நிலைய காவல்துறையினர் பாரதிய நியாய சங்கிதா சட்டத்தின் 74, 75, 78 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தலைமறைவான குற்றவாளியான ஆதித்யா ஆனந்தைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டுப் பெண்மணி ஒருவர் தைரியமாக வந்து புகார் அளித்துள்ள இச்சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…