“என் பாதுகாப்பிற்கு என்ன உத்தரவாதம்?…” கேப் காக நின்ற பெண்… ஆபாச வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை… தொலைபேசி வீடியோ பதிவு… ஓட்டம் பிடித்த காமுகன்…!

Spread the love

பெங்களூருவின் ராமமூர்த்தி நகர் பகுதியில் பெண் ஒருவர் தனது நண்பருக்காக சாலையோரத்தில் நின்றுகொண்டு கார் எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, விஜய் ராகவ் என்ற நபர் இருசக்கர வாகனத்தில் வந்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாகத் தனது செல்பேசியில் அதைப் பதிவு செய்யத் தொடங்கியதும், 42 வயதான அந்தப் பழ வியாபாரி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர், அந்தப் பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தச் சம்பவத்தின் காணொளியை வாகனத்தின் பதிவு எண்ணுடன் பதிவிட்டு, தனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை வெளிப்படுத்தியதுடன், காவல்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமடங்களில் பெண்கள் தனியாக நிற்கும்போது இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

https://twitter.com/HateDetectors/status/2081999350839062722/photo/1

இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த நபரைக் கைது செய்துள்ளனர். பொதுவெளியில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை எக்காரணம் கொண்டும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ளவோ அல்லது கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவோ முடியாது என்று குறிப்பிட்ட அந்தப் பெண், இதுபோன்ற நேரங்களில் பார்வையாளர்கள் அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இச்சம்பவம் பெங்களூரு நகரில் பெண்களின் பாதுகாப்புக் குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், துணிச்சலாகப் போராடி உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்த அந்தப் பெண்ணின் செயல் பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

Visaka

Recent Posts

“என் மனைவி திரும்பி வரணும்…” நண்பரை நரபலி கொடுத்து தலையை வெட்டி பூஜை செய்த கொடூரன்… சாமியார் சொன்னதால் அரங்கேறிய பயங்கரம்…!!

ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…

4 minutes ago

அம்மாடியோ… 75 வயசுல விவாகரத்தா?… 4 மகன்கள் பிரித்து வைத்த பெற்றோர்… 51 வருஷ பந்தத்தை பஞ்சாயத்து பண்ணிய போலீஸ்… உ . பி – யில் நடந்த சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…

18 minutes ago

“தேமுதிகவுக்கு 10 சீட் கொடுத்தால் உங்கள் கண்ணை ஏன் உறுத்துகிறது…?” பிரேமலதாவின் ஆவேச கேள்விக்கு திருமாவளவன் அதிரடி விளக்கம்…!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…

23 minutes ago

ஐயோ… கீழே விழுந்துடாதீங்க… 9 வது மாடி ஜன்னல் விளிம்பில் விளையாடிய குட்டீஸ்கள்… அலறிய பக்கத்துக்கு வீட்டு பெண்… இணையத்தில் கொந்தளித்த நெட்டிசென்கள்…!

மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…

33 minutes ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…

1 மணத்தியாலம் ago