தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் விபத்து வழக்குத் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டு கட்டங்களாக விசாரணைக்கு ஆஜரானார். இந்த விசாரணையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் ஊகங்கள் எழுந்துள்ளன. செப்டம்பர் 2025-ல் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தபோது வெளிப்படுத்திய உடல்மொழி, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது
விசாரணையைத் தொடர்ந்து விஜய் மற்றும் பாஜக இடையே ஒரு ‘ரகசிய உடன்படிக்கை’ எட்டப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் பலமான வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்றும், 2029 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் தனது பொதுக்கூட்டங்களில் பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜக-வின் இந்த விசாரணை அரசியல் அழுத்தம் கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நீயா நானா' நிகழ்ச்சியில் வாரந்தோறும் சமூகத்தில் நடக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுவது வழக்கம்.…
கோவை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், பா.ஜ.கவிலிருந்து அண்ணாமலை விலகியது அவருக்கு ஏற்பட்ட வேதனையின் காரணமாக இருக்கலாம் என்றும், அவர்…
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் பெயரைப் பயன்படுத்தி, அவரது லாட்டரி நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி…
நடிகை த்ரிஷா சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தனது அழகாலும் நடிப்புத் திறமையாலும் முன்னணி நடிகையாக வலம்…