சிபிஐ விசாரணைக்குப் பின் விஜய் முகத்தில் சிரிப்பு.. காரணம் பாஜகவுடன் ரகசிய டீலிங்..? அதிரும் தமிழக அரசியல் களம்…!!

By Soundarya on தை 30, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் விபத்து வழக்குத் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இரண்டு கட்டங்களாக விசாரணைக்கு ஆஜரானார்.   இந்த விசாரணையைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் ஊகங்கள் எழுந்துள்ளன. செப்டம்பர் 2025-ல் கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விஜய்யிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து அவர் வெளியே வந்தபோது வெளிப்படுத்திய உடல்மொழி, அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது

விசாரணையைத் தொடர்ந்து விஜய் மற்றும் பாஜக இடையே ஒரு ‘ரகசிய உடன்படிக்கை’ எட்டப்பட்டதாக வதந்திகள் பரவுகின்றன. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு எதிராகப் பலமான வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது என்றும், 2029 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விஜய் தனது பொதுக்கூட்டங்களில் பாஜக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றும், தனது கட்சி தனித்தே போட்டியிடும் என்றும் பலமுறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பாஜக-வின் இந்த விசாரணை அரசியல் அழுத்தம் கொடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்