தூது விட்டது யார்? “1000 கோடி ஆஃபரை தூக்கியெறிந்தேன்”.. நான் பாஜகவின் B-டீம்..? மிரள வைக்கும் சீமானின் ரகசிய வாக்குமூலம்..!

By Soundarya on தை 30, 2026

Spread the love

தன்னைத் தேடி வந்து ரூ.1,000 கோடி தருவதாகவும், தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் சிலர் ஆசை காட்டியதாகச் சீமான் தெரிவித்தார். ஆனால், “செத்துச் சாம்பலானாலும் தனியாகத்தான் களம் காண்பேன்” என்றும், லட்சியத்திற்காகப் பணத்தை நிராகரித்ததாகவும் அவர் மேடையில் முழங்கினார். மேலும் தான் பாஜக-வின் பி டீம் எனச் சொல்லப்படுவதைக் கடுமையாக மறுத்த அவர், “தம்பி விஜயையும் (தவெக), என்னையும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த குழந்தைகள் எனச் சொல்வது தவறு” என்று திருமாவளவன் உள்ளிட்ட மாற்றுக் கட்சித் தலைவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்றும், 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார். “இயேசுவின் மீது ஆணையாகச் சொல்கிறேன், யாருடனும் கூட்டணி இல்லை” என்று அவர் ஒரு கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.