ஒரே ஒரு லேப்டாப்…! ATM-ல் செலுத்த வேண்டிய 1.32 கோடியை வாரி சுருட்டிய உயர் அதிகாரி…. வெளியான பகீர் தகவல்கள்…!!

Spread the love

நெல்லையில் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்த செல்வகுமார் என்பவர், சுமார் 1.32 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையிலான பத்து நாட்களில், ஏடிஎம்களில் செலுத்த வேண்டிய தொகையைத் தனது மடிக்கணினி மூலம் ரகசியமாக வேறு கணக்குகளுக்கு மாற்றியது ஆய்வில் தெரியவந்தது. வங்கியில் எடுக்கப்பட்ட பணத்திற்கும் ஏடிஎம்மில் வைக்கப்பட்ட தொகைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருந்ததை கண்டுபிடித்த நிறுவன மேலாளர், இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையில் புகாரளித்தார்.

விசாரணையில், விடுமுறை நாட்களிலும் அலுவலகம் வந்த செல்வகுமார், அங்கிருந்த ஊழியர்களை மிரட்டி சாவியைப் பெற்றுத் துணிகரமாக இந்தப் பண மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த செல்வகுமாரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த மெகா மோசடியில் அவருக்குத் துணையாக வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா அல்லது திருடப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார் என்பது குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

15 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

29 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

30 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago