நள்ளிரவில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்… பதறி அடித்து ஓடிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

சென்னை வானகரத்தில் இரவு அதிக நேரம் படிப்பதை பெற்றோர் கண்டித்ததால் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் பகுதியை சேர்ந்த எபிபாத் (45) என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி. அவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றார். இந்த தம்பதியின் மகன் சஸ்வத் (17) தாய் பணியாற்றும் அதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார்.

இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்பதாவது மாடியில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மாணவன் படித்துக் கொண்டிருந்தபோது படித்தது போதும் போய் தூங்கு என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனிடையே சிறிது நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பகுதியில் சிறுவன் ஒருவன் மாடியில் இருந்து விழுந்ததாக குடியிருப்பு வாசிகள் கூறினார். உடனே எபிபாத் மற்றும் ராஜேஸ்வரி கீழே சென்று பார்த்தபோது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

   

உடனே சிறுவனை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவன் வீட்டில் இரவு அதிக நேரம் படித்து வந்ததாகவும் அவருடைய வீட்டில் பெற்றோர் படித்தது போதும் தூங்க செல் என்று கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.