இந்த வயசுல இப்படி ஒரு திறமையா…? 75 அடி உயரத்தில் உலக சாதனை படைத்த சகோதரர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

By Devi Ramu on மார்கழி 20, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் கபிலேஷ் என்ற சிறுவர்கள், 75 அடி உயரத்தில் கிரேனில் தொங்கியபடி யோகாசனம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 15 மற்றும் 13 வயதான இந்தச் சகோதரர்கள், ஆபத்தான உயரத்தில் ‘கோப்ரா’ வகை ஆசனத்தை சுமார் 4 நிமிடம் 13 நொடிகள் தொடர்ந்து செய்து காட்டி அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

இவர்களின் இந்த அசாத்தியமான திறமையைப் பாராட்டி ‘வேர்ல்ட் ரிகார்ட் யூனியன்’ என்ற அமைப்பு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கிக் கௌரவித்துள்ளது. சிறுவயது முதலே யோகாவில் ஆர்வம் கொண்ட இவர்கள், ஏற்கனவே பல போட்டிகளில் வென்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்.

   

இந்தச் சாதனை நிகழ்வில் தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டு சிறுவர்களுக்குப் பதக்கங்களை அணிவித்து வாழ்த்தினர். தமிழகத்திலேயே இது போன்ற ஒரு துணிகரமான யோகா முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

   

தங்களின் விடாமுயற்சியாலும் பயிற்சியாளர் சரவணகுமாரின் வழிகாட்டுதலாலும் இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியதாகச் சகோதரர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இந்தச் சிறுவர்களின் சாதனை சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலருக்கும் உடல்நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.