“இனி யாருடனும் கூட்டணியே வேண்டாம்” தனித்தே நிற்போம்… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆ.ராசா வைத்த அதிரடி கோரிக்கை..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

திமுக இனி யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆ.ராசா கோரிக்கை விடுத்துள்ளார். “திமுக தலைமையிலான கூட்டணி என்று ஒன்றுமில்லை” எனக் கூறுவதற்கு சிபிஎம் கட்சியின் சண்முகத்திற்கு என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், தொண்டர்களே இல்லாத ஒரு கட்சி, தங்களது பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டி கூட்டணி குறித்து முடிவு செய்வோம் என்று கூறுவதாக மதிமுக கட்சியையும் அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார். கூட்டணி விவகாரத்தில் திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ள இந்த கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.