தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், தற்போதைய தமிழக பொதுப்பணித் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, திமுக மேலிடம் மற்றும் குடும்பத்தினர் மீது மாபெரும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் மற்றும் ‘பார்ட்டி ஃபண்ட்’ (Party Fund) என்ற பெயரில் நடந்த வசூல்களை அம்பலப்படுத்தி புதிய அரசியல் புயலைக் கிளப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த 32 முக்கியத் துறைகளும் தலா 16 துறைகளாகப் பிரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். இந்தத் துறைகளின் மூலமாகத் திட்டமிட்டு திட்டம் போட்டு, கட்சி நிதிக்காகப் பெருமளவில் முறைகேடான பண வசூல் நடத்தப்பட்டதாக அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய ஆளுங்கட்சியான தவெக-வின் அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியான திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நீடித்து வருகிறது. அண்மையில் பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த திமுக ஆட்சியில் உதயநிதி துணை முதலமைச்சராக இருந்தபோதே குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்ற தேசிய குற்றக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களை முன்வைத்து, தவெக அரசு இதில் “நோ காம்ப்ரமைஸ்” என்ற கொள்கையோடு செயல்படுவதாகச் சவால் விடுத்தார்.
