“முழு உலகத்தையும் பழிவாங்க துடித்த கொடூரன்…!” ஊர்வலத்தில் 15,000 பேரை விஷம் வச்சு… கொல்ல பார்த்த சைக்கோ… மும்பையை உலுக்கிய அதிர்ச்சி பின்னணி…!!

Spread the love

மும்பை பைக்குல்லா பகுதியில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, வலி நிவாரண மாத்திரைகள் என்ற பெயரில் நச்சுத்தன்மை வாய்ந்த காப்ஸ்யூல்களை விநியோகித்த புனேயைச் சேர்ந்த பயாஸ் பிரேம்ஜி (39) என்ற நபர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்ட சில நிமிடங்களிலேயே மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய பைக்குல்லா போலீசார், அந்த நபர் தங்கியிருந்த விடுதியில் சோதனை நடத்தி, எலி மருந்துக்கு பயன்படுத்தப்படும் ‘ஜிங்க் பாஸ்பைடு’ என்ற ஆபத்தான நச்சு நிரப்பப்பட்ட சுமார் 14,900 மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பயாஸ் பிரேம்ஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி அவரை பிரிந்து சென்றதால், இந்த உலகத்தின் மீது ஏற்பட்ட விரக்தியில் “முழு உலகப்பழி வாங்க” அவர் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இதற்காக ஆன்லைன் மூலம் 30,000 காலியான மாத்திரைக் கூடுகளையும், 50 கிலோ நச்சுப் பொடியையும் ஆர்டர் செய்து, கடந்த 15 நாட்களாக விடுதி அறையில் தங்கி ஒவ்வொரு மாத்திரையிலும் நச்சை நிரப்பியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதன் மூலம் சுமார் 15,000 மக்களைக் கொல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த நபர் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலை முயற்சி , நஞ்சு கொடுத்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அதே வேளையில், அவர் இதற்கு முன்பு ஈராக் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் பணியாற்றியுள்ளதால், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் பயங்கரவாதத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து உளவுத்துறை மற்றும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகிய அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Swetha

Recent Posts

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

5 minutes ago

ஷாக்… தங்கத்துல உள்ளாடையா..?! மெகா ஊழல் சோதனையில் சிக்கிய பெண் எம்பி.. ரூ539 கோடி ரொக்கம்.. 27 கிலோ தங்கத்தை பார்த்து.. மிரண்டு போன அதிகாரிகள்…!!

ஈராக் நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாஸி என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி ஊழல் தடுப்பு சோதனையில், தங்க…

15 minutes ago

விஜய் ஆட்சியை கவிழ்க்க சதியா?… ரூ.35 கோடி பேரம்… சிக்கிய திமுக புள்ளி… பின்னணியில் முன்னாள் அமைச்சர்?…!

தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியைத் கவிழ்க்கும் நோக்கில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களிடம் பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக…

20 minutes ago

விஜய்யை வீழ்த்த திமுக – அதிமுக ரகசிய டீல்… எஸ்பி வேலுமணி கடிதத்தால் அம்பலமான உண்மை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் அனல் பறந்து…

22 minutes ago

குஷியோ குஷி… தமிழகப் பெண்களின் வங்கிக் கணக்கில் பணம்…. CM விஜய் அறிவித்தார்…!

தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சுய தொழில் தொடங்கி முன்னேறுவதற்காக, தமிழக அரசு…

32 minutes ago

“என் குரல் இல்லை… நிரூபிக்க ரெடி…” ஆடியோ சர்ச்சைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் கொடுத்த மாஸ் சவால்…!

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர்…

32 minutes ago