“ரோட்டையும் கொஞ்சம் பாருங்க”… 100 கி.மீ வேகத்தில் வீடியோ பார்த்துக்கொண்டே பஸ் ஓட்டிய கொடூரம்… பயணிகளின் நிலைமை?… அலட்சியத்தின் உச்சம்… நெஞ்சை பதறவைக்கும் காட்சி…

Spread the love

ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் சுமார் 100 கி.மீ வேகத்தில் பேருந்தை இயக்கும்போது, தனது மொபைல் போனில் ஏதோ ஒரு வீடியோவை உற்றுப் பார்த்துக் கொண்டே செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைகளை ஸ்டீயரிங்கில் வைக்காமல், முழங்கைகளால் பேருந்தை கட்டுப்படுத்தியவாறு, அவ்வப்போது மட்டுமே சாலையை கவனித்து அவர் வாகனம் ஓட்டியது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நடத்துனரும் சாலையை கவனிக்காமல் படுத்துக்கொண்டே தனது மொபைல் போனைப் பயன்படுத்தியது அலட்சியத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வெளியாகாத நிலையிலும், நெடுஞ்சாலைகளில் தனியார் பேருந்து ஊழியர்களின் இத்தகைய ஆபத்தான செயல்பாடுகள் வழக்கமாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைப் பணயம் வைத்து, இவ்வளவு பொறுப்பற்ற முறையில் செயல்பட்ட ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இருவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் சில நொடிகள் கவனச்சிதறல் ஏற்பட்டாலும் அது மிகப்பெரிய விபத்திற்கு வழிவகுக்கும் என சாலை பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

Visaka

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

4 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

4 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

5 மணத்தியாலங்கள் ago