ஐயோ கொடுமையே… ஷாப்பிங் செய்ய வந்த இடத்துல… கர்ப்பிணிப் பெண்ணுக்கு இந்த கதியா?… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 3, 2026

Spread the love

அமெரிக்காவில் ஹாலோவீன் வார இறுதியில் நடந்த தொடர் வன்முறைத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், 24-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும் 90-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கலிபோர்னியாவில் இருந்து டெலாவேர் வரை பரவிய இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், மக்கள் அதிகம் கூடும் இரவு நேர கேளிக்கை மையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் திருவிழா பகுதிகளை இலக்காகக் கொண்டு நிகழ்ந்துள்ளன. கலிபோர்னியாவின் ஃபேர்ஃபீல்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஹாலோவீன் அங்காடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.

   

மேலும், பல்கலைக்கழக வளாகங்களுக்கு அருகிலும் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. டெலாவேர் பல்கலைக்கழகம், அர்கான்சாஸ் பல்கலைக்கழகம் மற்றும் இல்லினாய்ஸ் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் மாணவர்கள் உட்பட பலர் துப்பாக்கிக் குண்டடி பட்டனர். ஆலாபாமாவில் விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு நடந்த மோதலும் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இச்சம்பவங்கள் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், சந்தேக நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.