தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுகவின் முக்கிய அரசியல் நகர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தொகுதி மாற்றி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் உதயநிதி தன்னுடைய தாத்தாவும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூரிலிருந்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
கலைஞர் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய முக்கிய தளமாக திருவாரூர் மாவட்டம் கருதப்படுகிறது. அவர் திருவாரூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அந்த அரசியல் பாரம்பரியத்தை தொடரும் வகையில் உதயநிதி திருவாரூரில் இருந்து களமிறங்கினால் அது திமுகவின் முக்கிய அரசியல் வியூகமாக பார்க்கப்படுகின்றது. இதனிடையே முதல்வர் ஸ்டாலின் மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுவார் என்றே திமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று தேர்தல்களிலும் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்டாலின் அந்த தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் மீண்டும் அவர் அங்கு போட்டியிட உள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் தொகுதி மாற்றம் குறித்து இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் உதயநிதி போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் ருசி ஆனந்த், தனது துறையின் கலாச்சார…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, தர்மபுரி பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி கோரிக்கை விடுத்தார்.…
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ராக்மார்ட் பகுதியில் ஹன்னா இஸ்ரேல் என்பவரது குடும்பத்தினர் 'ஹீ-ஹா' என்ற குட்டி ஆண் கழுதையைத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் இடநெருக்கடி காரணமாகப் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு…
மும்பை அருகே உள்ள மீரா பயந்தர் மாநகராட்சி , குறிப்பிட்ட 20 இடங்களைத் தவிர்த்துப் பிற பொது இடங்களில் தெரு…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,050 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம்…