திக் திக்…! 6 மாத குழந்தையை கடித்து குதறிய பிட்புல் நாய்… பதற்றமில்லாமல் அசால்ட்டாக நின்ற ஓனர்… அலறிய பெண்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on புரட்டாதி 18, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில், ஆபத்தான ரகத்தைச் சேர்ந்த பிட்புல் வளர்ப்பு நாய் ஒன்று, 6 மாதமே ஆன கைக் குழந்தையை மிகக் கொடூரமான முறையில் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் குழந்தையைக் கொடூரமாகத் தாக்கி உயிருக்குப் போராடச் செய்த தருணத்திலும், அதைப் பற்றி எந்தவித அச்சமும் கவலையுமின்றி அதன் உரிமையாளர் மிகவும் நிதானமாக நின்றுகொண்டிருந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை உரையவைத்துள்ளன.

பிட்புல் நாயின் தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்தச் சிறு குழந்தை உடனடியாக மீட்புப் படையினரால் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாய்களின் தாக்குதல்களுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆபத்தான நாய் ரகங்களை வளர்ப்பவர்கள் மீதும், இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமான நாயின் உரிமையாளர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனிபட் பகுதியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.