“என் உடம்புல ஓடுறது சாதாரண ரத்தமில்ல” விஷப்பாம்பு கடிச்சு மனுஷன் சாகல பாம்பு தான் செத்துச்சு… பாம்புக்கடி நபர் சொன்ன ஆச்சர்ய தகவல்..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் .  25 வயதான இவர் சம்பவத்தன்று தன்னுடைய பண்ணைக்கு சென்ற போது தான் ஒரு விஷ பாம்பின் மீது தவறுதலாக கால் வைத்துள்ளார்.  அந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. ஆனால் இதில் அதிசயம் என்னவென்றால் அந்த விஷ பாம்பு சுமார் ஐந்து நிமிடத்திற்குள் இறந்து போனது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், இது மிகவும் அபூர்வமான சம்பவம். பாம்பு கடித்ததில் சச்சின் பிழைத்துக் கொண்டார். கடினமாக  மிதித்ததால்  அதன் விஷப்பை நசுங்கி பாம்பு இறந்திருக்கலாம் என்று  கூறியுள்ளனர்.

ஆனால் சச்சின் தான் தினமும் வேப்பம், பிசுண்டி, மாம்பழம், கரைஞ்சி, துவரை போன்ற மரக்குச்சிகளை பயன்படுத்தி பல துலக்கி வருவதாகவும் இந்த இயற்கை மரப்பகுதிகள் கலந்து உருவான நுண்ணுயிர்  மாற்றங்கள் அவருடைய ரத்தத்தில் பாம்புக்கு தீங்கிழைக்கும்  தன்மையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது பாம்பு கடித்த உடனே அந்த பாம்பு இறந்ததற்கான ஒரு காரணமாக கூட இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.  இந்த அதிசய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.