ஹைதராபாத்தைச் சேர்ந்த பிவி நரசிம்மராவ் என்பவர் சம்பவத்தன்று அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்பத்து திடீரென்று விரைவு சாலையில் ஒட்டகத்தின் மேல் அமர்ந்து பயணித்துள்ளார். இதை அங்கிருந்த பலரும் வேடிக்கையாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒட்டகம் சாலை விளிம்பின் பக்கத்தில் செல்லும்போது குடிபோதையில் சவாரி செய்யும் அந்த நபர் ஆபத்தான முறையில் மேலே இருந்து ஊசலாடுவதையும் பார்க்க முடிகிறது.
View this post on Instagram
ஒரு கட்டத்தில் இதை பார்த்த ஷா என்பவர் ஆபத்தை உணர்ந்து ஒரு பாட்டிலில் இருந்து தண்ணீரை நரசிம்மராவ் மீதுதெளித்து அவரை சுயநினைவு கொண்டு வந்திருக்கிறார். கடைசியில் ஷாவும் அவருடைய நண்பரும் குதிரையின் வேகத்தை குறைத்து அந்த நபரை காப்பாற்றியுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் ஷாவை ஹீரோ என்று பாராட்டி உள்ளார்கள். உங்களைப் போன்ற மனிதர்கள் இந்த மனித குலத்திற்கு அதிகம் தேவை. உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்று பயனர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் ஒருவர் நீங்கள் அவருடைய உயிரையும், விபத்துகளையும் காப்பாற்றி உள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
