வலையில் சிக்கிய அதிர்ஷட மீனால் ஒரே நாளில் மாறிய வாழ்க்கை… இதுக்கு பேரு தான் அதிர்ஷ்டமோ..!!

By Soundarya on ஆனி 20, 2025

Spread the love

ஒடிசாவில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றபோது ராட்சத அரியவகை மீனான  டெலியா சிலா வலையில் சிக்கியுள்ளது. சுமார் ஒன்பது மீன்கள் சிக்கி உள்ளது. இந்த மீன்களை மீனவர்கள் 15 லட்சத்திற்கு விற்று உள்ளார்கள் .அதாவது ஒரு கிலோ மீட்டர் 7500க்கு விற்கப்பட்டது. மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற பிறகு அந்த பகுதி சேர்ந்த ஷேக் ரோஹிமுல் என்பவருடைய வலையில் தான் இந்த அரியவகை மீன்கள் சிக்கி உள்ளன. இந்த மீனை பார்ப்பதற்காக  அங்கிருந்த பலரும் கூடியுள்ளார்கள்.

இதனை அடுத்து கொல்கத்தாவை சேர்ந்த ஒரு நிறுவனம் அந்த மீன்களை 15.15 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.  ‘டெலியா சிலா மீன்கள் மருத்துவ குணம் கொண்டவை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வகை மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் நடமாடுகின்றன. கடல் வாயில் அரிதாக தான் காணப்படும். மீனின் மதிப்பு மற்றும் அதனுடைய பாலினம், எடையை பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நுகர்வோர் தயாரிப்பு நிறுவனங்களால் அவற்றின் வயதான எதிர்ப்பு பண்புகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.