நன்றாக கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு பலருக்கும் கனவாக இருக்கும். ஒரு சிலரால் நினைத்தபடி சம்பாதிக்க முடியாது. ஒரு சிலர் ஒன்னுமே இருக்காது ஒரு சிறிய ஐடியாவை பயன்படுத்தி அதிக பணத்தை சம்பாதித்து விடுவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மிகப் பிரபலமாக தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு திருவிழா தான் மகா கும்பமேளா. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மகா கும்பமேளாவுக்கு கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் வந்து திரிவேணி சங்கமத்தில் கங்கையில் புனித நீராடி செல்கின்றனர். மகா கும்பமேளா நேரத்தை பயன்படுத்தி தான் ஒரு நபர் தினமும் ரூ 4000 வரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
அது என்னவென்றால் கங்கையில் புனித நீராட வரும் பக்தர்கள் சில்லறை காசுகளை கங்கையில் போட்டுவிட்டு செல்வர். அது மட்டும் இல்லாமல் அவர்கள் செம்பு இரும்பு போன்றவற்றையும் போடுவர். இதை காந்தங்களை பயன்படுத்தி அந்த நபர் தண்ணீருக்குள்ளாக சென்று சில்லறை மற்றும் மற்ற பொருட்களை எடுத்து சம்பாதித்து வருகிறார்.
இப்படி தினமும் அவர் செய்வதால் ஒரு நாளைக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ 4000 வரை அவர் சம்பாதித்து இருக்கிறாராம். இதை தற்போது நெட்டிசன்கள் வைரலாக பேசி வருகின்றனர். ஒரு இன்ஜினியரிங் படித்த பட்டதாரிக்கு கூட இவ்வளவு சம்பளம் கிடையாது ஒரு சிறிய ஐடியாவை பயன்படுத்தி இவர் இப்படி சம்பாதிக்கிறாரே என்று பேசி வருகிறார்கள்.