குளிர்காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், காலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது என்பது பலருக்கும் பெரும் சவாலாக உள்ளது. வசதி படைத்தவர்கள் கீசர் மற்றும் வாட்டர் ஹீட்டர்களைப் பயன்படுத்தினாலும், சாமானிய மக்கள் இன்றும் அடுப்பு அல்லது ஹீட்டிங் ராடுகளை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. இது அதிக நேரத்தையும் உழைப்பையும் கோருகிறது. இந்த நிலையில், ஒரு இளைஞன் தண்ணீரை எளிதாகச் சூடாக்க ஒரு புதிய முறையைக் கண்டறிந்துள்ளார். மிகவும் எளிமையான மற்றும் செலவற்ற அவரது இந்த வினோதமான முயற்சி, இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது பைக்கைப் பயன்படுத்தி வினோதமான முறையில் குளிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. முதலில் தனது பைக்கை ஸ்டாண்டில் நிறுத்தும் அவர், அதன் பின் சக்கரத்திற்கு அடியில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை வைக்கிறார். பின்னர், தண்ணீரின் மேல் பெட்ரோலை ஊற்றி தீயை மூட்டுகிறார். இது ஒரு ஆபத்தான செயல்பாடு என்பதால் இதை முயற்சி செய்யக்கூடாது. பெட்ரோல் மிகவும் எளிதில் தீப்பிடிக்கக்கூடியது மற்றும் கட்டுப்பாடற்ற தீவிபத்துகள் அல்லது வெடிப்புகளை ஏற்படுத்தலாம். இது போன்ற செயல்கள் கடுமையான காயங்கள் அல்லது உயிரிழப்புக்கு கூட வழிவகுக்கும் என இணையவாசிகள் கருது தெரிவித்து வருகிறார்கள்.
மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ்…
மின்துறை டெண்டர்களில் கடந்த காலங்களில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை என்றும், தற்போதைய மின்வெட்டுப் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே 20 லட்சத்திற்கும்…