குஜராத் மாநிலம் சூரத் நகரில், ஏழாவது மாடியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்குள் தற்கொலைக்கு முயன்ற நபரைத் தனது உயிரைப் பணைய வைத்து மீட்ட காவலர் சைலேஷ் சூடாசமாவுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சூரத்தின் லஸ்கானா பகுதியில் கடந்த ஜூன் 8ஆம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. விஷம் குடித்த கணவரைக் காப்பாற்றுமாறு அவரது மனைவி அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
நேரம் கடந்து கொண்டிருந்ததால், காவலர் சைலேஷ் மற்றும் ஓட்டுநர் கிருபால்சிங் கோஹில் ஆகியோர் பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாகப் புகுந்து காப்பாற்றத் திட்டமிட்டனர். இதன்படி, ஏழாவது மாடியின் வெளிப்புறப் பாதுகாப்பு கிரில் கம்பிகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் ஏறிச் சென்ற சைலேஷ், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்தார். உள்ளே சென்றபோது அந்த நபர் விஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, எஞ்சியிருந்த விஷப் பாட்டிலை அவரிடமிருந்து பறிமுதல் செய்தார்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் தாமதிக்காமல், அந்த வைர வியாபாரத் தொழிலாளியைத் தங்களது வாகனத்திலேயே ஏற்றி விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அவர் உயிர் தப்பினார். காவலரின் இந்தத் துணிச்சலான மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், குஜராத் துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி உட்படப் பலரும் இந்த வீரச் செயலைப் பாராட்டி வருகின்றனர்.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…