அதிர்ச்சி..! துக்க நிகழ்ச்சியில் கேக் வெட்ட மறுத்த திருமாவளவன்.. மேடையிலேயே தொண்டர் செய்த செயலால் பரபரப்பு..!

By Soundarya on தை 9, 2026

Spread the love

திருவள்ளூரில் துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம், தொண்டர் ஒருவர் தனது மகளின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டுமாறு வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் இடத்தில் கேக் வெட்டுவது முறையல்ல எனக் கருதி திருமாவளவன் அதனை மறுத்துள்ளார்.

தலைவரின் மறுப்பால் ஆத்திரமடைந்த அந்தத் தொண்டர், தான் கொண்டு வந்த கேக்கை மேடையிலேயே தூக்கி வீசினார். துக்க நிகழ்வு நடைபெற்ற இடத்தில் நடந்த இந்த எதிர்பாராத செயலால் அங்கிருந்த கட்சியினரும் பொதுமக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைதளங்களில் இது தொடர்பான காணொளி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.