வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் உருவானால் 2026 ஆம் ஆண்டின் முதல் புயலாக இது இருக்கும். இதன் தாக்கத்தால் இன்று கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்று நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
