ஹரியானா மாநிலம் கர்னாலில் பேருந்து மோதிய விபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய பெண்ணை, சோனாக்ஷி என்ற செவிலியர் மாணவி சமயோசிதமாக செயல்பட்டு சிபிஆர் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளார். கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சோனாக்ஷி, சாலையோரம் மயங்கிக் கிடந்த பெண்ணைக் கண்டு உடனடியாக முதலுதவி செய்யத் தொடங்கினார். சுமார் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து நெஞ்சுப் பகுதி அழுத்தங்களை வழங்கி, அந்தப் பெண்ணின் நாடித் துடிப்பை மீட்டெடுத்தார். இக்கட்டான அந்தச் சூழலில், அங்கிருந்த பொதுமக்களின் உதவியோடு ஆம்புலன்ஸுக்காகக் காத்திருக்காமல், ஒரு தனியார் வாகனத்தை நிறுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலும் அந்தப் பெண்ணிற்குத் தடையின்றி சிபிஆர் சிகிச்சையை சோனாக்ஷி தொடர்ந்து அளித்துக் கொண்டே சென்றார். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் அந்தப் பெண்ணின் உயிர் காக்கப்பட்டது. செவிலியர் மாணவியின் இந்தத் துணிச்சலான மற்றும் சமயோசிதமான செயலைப் பாராட்டி சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம், அவசரக் காலங்களில் உயிரைக் காக்க உதவும் சிபிஆர் (CPR) போன்ற முதலுதவிப் பயிற்சிகளின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது.
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…