தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தனது போதைக்குத் தேவையான பணத்திற்காக, இரண்டு மாதமே ஆன தனது பச்சிளம் ஆண் குழந்தையை விற்க துணிந்துள்ளார். இதற்காக இடைத்தரகர்கள் சிலரைத் தொடர்பு கொண்ட பெண், தனது கணவருக்குத் தெரியாமல் குழந்தையை ஐதராபாத்தில் இருந்து புனேவிற்கு கடத்திச் சென்றுள்ளார்.
அங்கு தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சுமார் 2.4 லட்சம் ரூபாய்க்கு அந்த குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என லட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்ததில், மதுவுக்காகத் தாய் செய்த இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனையடுத்து குழந்தையை வாங்கிய நபர், இடைத்தரகர்கள் மற்றும் அந்தப் பெண் என நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாகக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…