நீயெல்லாம் ஒரு தாயா…? “குடிக்க பணம் இல்ல…” 2 மாத பிஞ்சு குழந்தையை விற்ற பெண்… போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on மார்கழி 17, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் வசிக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தனது போதைக்குத் தேவையான பணத்திற்காக, இரண்டு மாதமே ஆன தனது பச்சிளம் ஆண் குழந்தையை விற்க  துணிந்துள்ளார். இதற்காக இடைத்தரகர்கள் சிலரைத் தொடர்பு கொண்ட பெண், தனது கணவருக்குத் தெரியாமல் குழந்தையை ஐதராபாத்தில் இருந்து புனேவிற்கு கடத்திச் சென்றுள்ளார்.

அங்கு தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கு சுமார் 2.4 லட்சம் ரூபாய்க்கு அந்த குழந்தையை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என லட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்ததில், மதுவுக்காகத் தாய் செய்த இந்தக் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

   

இதனையடுத்து குழந்தையை வாங்கிய நபர், இடைத்தரகர்கள் மற்றும் அந்தப் பெண் என நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாகக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.