2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை திமுக தலைமை இன்று (டிசம்பர் 17, 2025) அமைத்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.கே.எஸ். இளங்கோவன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கோவி. செழியன் மற்றும் எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
