“தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது” என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு தாய் தனது தலையில் மிகப்பெரிய புல் கட்டைச் சுமந்து செல்கிறார். பார்ப்பவர்களை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்துவது என்னவென்றால், அந்தப் புல் கட்டிற்குள்ளேயே தனது பச்சிளம் குழந்தையையும் பாதுகாப்பாக வைத்துத் துணியால் கட்டியிருக்கிறார்.
मां की ममता का अंदाजा लगाना इंसान की सोच से बाहर है 😂 ,,
सिर पर घास, साथ में बच्चा… देखिए मां का संघर्ष!” गांव से सामने आया एक दिल छू लेने वाला लेकिन चौंकाने वाला वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है. वीडियो में एक मां सिर पर घास का गट्ठर उठाए चलती नजर आती है और उसी… pic.twitter.com/othhnlr3Ee— TANVIR RANGREZ (@virjust18) April 24, 2026
கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் தன் குழந்தையைத் தவிக்க விடக்கூடாது என்ற அந்தத் தாயின் பேரன்பு பலரையும் நெகிழச் செய்துள்ளது. புல் கட்டின் பாரத்திற்கு இடையே அந்தப் பிஞ்சு குழந்தை எதைப்பற்றியும் கவலையின்றி நிம்மதியாக உறங்கிக்கொண்டு செல்கிறது. வாழ்வாதாரத்திற்காகக் போராடும் அதே வேளையில், தாய்மையின் கடமையையும் சற்றும் தளராமல் செய்யும் இந்தத் தாயின் வீடியோ, “உலகில் அம்மாவை விடச் சிறந்த போராளி யாருமில்லை” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.
