அம்மாடியோ… நீங்க என்ன இத்தனை பாஷை பேசுறீங்க?… ரயிலில் பொருட்களை விற்றபடியே… 18 மொழிகளில் பேசி பயணிகளை உரைய வைத்த வியாபாரி… இணையத்தில் வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 23, 2026

Spread the love

ரயில் பயணத்தின் போது பற்கள் துலக்கும் பிரஷ், பேஸ்ட் மற்றும் சோப்புகள் விற்றுக்கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் பயணிகள் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது அவர் தமக்கு 18 முதல் 19 மொழிகள் தெரியும் என்று கூறி, பயணிகளுடன் சரளமாக ஆங்கிலத்திலும் பல்வேறு மாநில மொழிகளிலும் பேசி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அக்ஷய் மேத்தா என்பவர் இந்த நிகழ்வைப் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

பயணிகள் அவரிடம் இத்தனை மொழிகளை எப்படி கற்றுக்கொண்டீர்கள் என்று ஆர்வத்துடன் கேட்டபோது, எந்தவித முறைசாரா கல்வியும் இன்றி, தொடர்ந்து பல இடங்களுக்குப் பயணித்து மக்கள் பேசுவதைக் கவனித்தே சுய முயற்சியால் மொழிகளைக் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு இந்திய மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமைகளையும் தொடர்புகளையும் அவர் பயணிகளுக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

   

இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, சமூக வலைதளப் பயனர்கள் பலரும் அந்த வியாபாரியின் முயற்சிக்கும் கற்கும் ஆர்வத்திற்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உழைப்புடன் கூடிய சுய கற்றல், விடாமுயற்சி மற்றும் திறமைக்கு சான்றாக இவர் திகழ்கிறார் என்றும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் சாதாரண மனிதர்களிடமும் பல அபார திறமைகள் மறைந்திருக்கின்றன என்றும் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.