“கடைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்கயா?”…. உ.பி-யில் காதலனுடன் உலா வந்த மனைவியை சுட்டுத் தள்ளிய கணவன்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், திருமணத் திற்குப் புறம்பான உறவுச் சந்தேகத்தின் பெயரில் கணவனே தனது மனைவியையும் அவரது ஆண் நண்பரையும் நடுரோட்டில் சுட்டுக் காயப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபிரோசாபாத் கோட்லா சுங்கி பகுதியில் அமைந்துள்ள டி.ஏ.வி சந்தையில் இரவு சுமார் 8.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. ரிஷப் தைலாங் (35) என்பவரின் மனைவியான ஷிப்ரா (32), தனது ஆண் நண்பரான ஜிதேந்திர தாக்கூர் என்பவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது,மைப் பின்தொடர்ந்து சென்ற கணவன் ஆத்திரமடைந்து தனது உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் இருவரையும் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இத்துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஷிப்ரா மற்றும் சன்னி இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆக்ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ரிஷப்பை சம்பவ இடத்திலேயே கைது செய்து, அவரிடமிருந்து உரிமம் பெற்ற துப்பாக்கி மற்றும் காலி தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். தங்களுக்கு இடையே நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கும், மனைவியின் கள்ளத் தொடர்புகளுமே இக்கொடூரச் செயலுக்கான முதன்மைக் காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.