அதிர்ச்சி..! கனவுகளோடு மாணவி… நடன மேடையில் ஜொலித்த பெண்… விவேக் எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்த சோகம்…!!

By Gayathri on ஐப்பசி 8, 2026

Spread the love

கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அசாமிலிருந்து நடனக் குழுவினருடன் விசாகப்பட்டினம் சென்ற குவாஹாட்டி பி. பருவா கல்லூரி மாணவி ஹிமாஸ்ரீ போரோ, அங்கு தங்கிவிட்டு சொந்த ஊர் திரும்பும் வழியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். செப்டம்பர் 30 அன்று விசாகப்பட்டினத்தை அடைந்த அவர், பின்னர் குவாஹாட்டி நோக்கிச் சென்ற ‘கன்னியாகுமரி-திப்ருகர் விவேக் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் பயணம் செய்தபோது திடீரென மாயமானார்.

ரயிலில் அவருடன் பயணித்தவர்கள் அவரைத் தீவிரமாகத் தேடிய நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் ரயில்வே தண்டவாளம் அருகே ஹிமாஸ்ரீயின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் இருந்து தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் சதிச் செயல் நிகழ்ந்ததா என்ற கோணங்களில் ரயில்வே மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.