BREAKING: திடீர் திருப்பம்…. சுப்பராயன் மகனின் அதிரடி அரசியல் என்ட்ரி…. அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்த ‘நவீன மனிதர்கள்’ அமைப்பு…..!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ‘நவீன மனிதர்கள்’ அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் தலைமையில் அதன் முக்கிய நிர்வாகிகள் பலர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பராயனின் மகனான பாரதி சுப்பராயன், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தனது தந்தைக்காக தீவிர தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் போது, நவீன மனிதர்கள் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்தன், செயலாளர் வி. சுரேஷ், பொருளாளர் ஆர். பிரகாஷ் சந்திரன் மற்றும் துணைப் பொருளாளர் எ. செந்தில்குமார் ஆகியோர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் துணைச் செயலாளர்களாகப் பொறுப்பு வகித்த ராஜா, சி. ஜேம்ஸ், தமிழ்செல்வன், சிவசந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் கழகத்தில் இணைந்தனர்.

   

இவர்களின் இந்த இணைப்பானது, திமுகவின் பலத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இளைஞர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்த நவீன மனிதர்கள் அமைப்பின் நிர்வாகிகள் திமுகவில் இணைந்திருப்பது, அப்பகுதியில் கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய உறுப்பினர்களைத் திமுக தலைமை அன்போடு வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தது.