நாய்களைப் போலவே ஆணின் மனநிலை… எப்போது என்ன செய்வான் என்று தெரியாது… பிரபல நடிகை பரபரப்பு கருத்து…!!

By Soundarya on தை 9, 2026

Spread the love

தெருநாய்கள் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “நாய்கள் எப்போது கடிக்கும் என்பதை அதன் மனநிலையைப் பார்த்து யாராலும் கணிக்க முடியாது” என்று  கருத்து தெரிவித்திருந்தது. நாய்களின் நடத்தை குறித்து நீதிமன்றம் முன்வைத்த இந்த வாதம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த கருத்தை மேற்கோள் காட்டி நடிகை திவ்யா ஸ்பந்தனா தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாய்களைப் போலவே ஒரு ஆணின் மனநிலையையும் நம்மால் எப்போதும் துல்லியமாக அறிய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

   
மேலும், ஒரு ஆண் எப்போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவான் அல்லது எப்போது கொலை செய்வான் என்பது தெரியாது என்பதால், முன்னெச்சரிக்கையாக அனைத்து ஆண்களையும் சிறையில் தள்ள முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தெருநாய்கள் விவகாரத்தில் எடுக்கப்படும் அதிரடி முடிவுகளை விமர்சிக்கும் வகையில் திவ்யா ஸ்பந்தனா வெளியிட்டுள்ள இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.