2 குழந்தைகளுக்கு தந்தையான நபரை திருமணம் செய்வேன் என அடம் பிடித்த மகள்… இரவோடு இடவாக தந்தை செய்த கொடூரம்…!

By Nanthini on தை 9, 2026

Spread the love

சேலத்தில் தங்கி படித்து வந்த நெல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவ மாணவி காதல் விவகாரத்தில் மர்மமான முறையில் விடுதியில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அடுத்த சித்தர் கோவில் அருகே சிவராஜ் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு திருநெல்வேலி வீரவநல்லூர் பாரதிநகரை சேர்ந்த வரதராஜன் என்பவருடைய மகள் வர்ஷினி (24) இறுதியாண்டு ஹோமியோபதி மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி அருகே உள்ள பகுதியில் லட்சுமணன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தோழியுடன் வாடகைக்கு தங்கி இருந்தார்.

இந்நிலையில் அவருடைய தோழி ஊருக்கு சென்று விட்டு நேற்று காலை அறைக்கு வந்த போது படுக்கையிலேயே வர்ஷினி உயிரிழந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தோழி சக நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி விஷம் குடித்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. வர்ஷினியின் தந்தை வரதராஜன் நேற்று இரவு மகள் வர்ஷினியின் அறைக்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசிய உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

   

இதனால் அவருடைய செல்போன் எண்ணுக்கு போலீசார் அழைத்த போது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. போலீசார் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் வர்ஷினி ஒருவரை காதலித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தந்தை வரதராஜனுக்கு பிடிக்கவில்லை. மாணவியின் எல்லையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவர் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது தனியாக வசித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.

   

இந்த காதல் விவகாரம் வர்ஷினியின் தந்தைக்கு பிடிக்கவில்லை. இதனால் மகளின் விடுதிக்கு வந்த வரதராஜன் அவரிடம் காதல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு மறுநாள் காலை வர்ஷினியின் தோழி வந்து கதவை திறந்த போது கதவு வெளிப்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. கதவைத் திறந்து பார்த்த போது தான் வர்ஷினி இறந்து கிடந்துள்ளார். எனவே வர்ஷினியை அவருடைய தந்தை தான் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கும் நிலையில் அவரை தேடி வருகின்றன. இந்த கொலை ஆணவக் கொலையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.