யாரு சாமி நீ…? ஓடும் கார் டாப்பில் நின்று பணத்தை வாரி வீசிய நபர்… வெடி வெடித்து ஆபத்தான ஸ்டண்ட்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 30, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் காரின் கூரையில் நின்றுகொண்டு நபர் ஒருவர் பணத்தை வாரி இறைப்பதும், காரில் இருந்தபடியே பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபடுவதுமான பகீர் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கட்முக்தேஸ்வர் பகுதியில் உள்ள சரூர்பூர் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த காரின் கூரையின் மீது ஆபத்தான முறையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், காற்றில் ரூபாய்த் தாள்களை வாரி வீசியுள்ளார். மேலும், அந்த காரிலிருந்து ஆபத்தான முறையில் வானவெடிகள் மற்றும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டுள்ளன.

   

சமூக வலைதளங்களில் லைக்ஸ்களுக்காகவும் வைரல் வீடியோக்களுக்காகவும் பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைப் பாதுகாப்பு விதிகளுக்கு முற்றிலும் புறம்பாகச் செயல்பட்ட இந்த நபர்கள் மீது உத்தரப் பிரதேசக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.