தமிழ் நாடக மற்றும் திரைப்படத்துறையில் மூத்த நடிகையாக விளங்கிய வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு காரணமாகக் காலமானார். 1979-இல் நாடகக் கலைஞராகத் தன் கலைப் பயணத்தைத் தொடங்கிய இவர், மேடை நாடகங்கள், சின்னத்திரை தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் என பல்வேறு தளங்களில் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்தார்.
‘சதி லீலாவதி’, ‘ரோஜா’, ‘வின்னர்’, ‘ரிதம்’, ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ உள்ளிட்ட பல பிரபலமான தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அவரது மறைவுக்குத் தமிழ் திரையுலகினரும், நாடகக் கலைஞர்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
